Wednesday, August 13, 2008

பாராட்டு

படம் பார்த்து கற்பனை கலந்து கவிதை படைத்தவன் நான்
ஆனால் புரிந்து கொண்டு ரசனையுடன் பாராட்டுவதோ நீ

இயற்கையோடு என்னையும் புகழ விரும்பும் உன் குணம்
நிச்சயமாக உன்னை போன்ற ஒருசில பேருக்கே வரும்

மேகத்தை ஆணாய் மலையை பெண்ணாய் பார்க்கும் உன் திறமை
அதனினும் மேலாய் இருவரின் தோழியாய் நதியை நீ பார்ப்பது புதுமை

உன் விருப்பத்திற்காக பதிலை ஒரு கவிதையாய் அனுப்புகிறேன்
நீ படிப்பதுவே பாராட்டுவதற்கு சமமாய் உணர்கிறேன்

No comments: