Saturday, August 16, 2008

இடம் கொடு

நான் சொல்லிப் பார்த்து விட்டேன்.
கேட்க மாட்டேன் என்கிறது
இந்த மனக் குரங்கு
போகட்டும் விட்டு விடு.
உன் கிளைகளின்
தாவது ஒரு ஓரத்தில்
கொஞ்சம் இடம் கொடு.
தொங்கிக் கொண்டு இருக்கட்டும்.

No comments: