Friday, September 26, 2008

தெரியும்

உனக்குப் பிடித்த எல்லா
விழியங்களுமே எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடித்து இருக்கிறதா
என்பதை தவிர

Wednesday, September 24, 2008

அன்பு

அதிகம் அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்து விடும்

பாவம் அதற்கு தெரியாது
பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று

சுமை

தாய் கருவில் சுமக்கிறாள்
தந்தை தோளில் சுமக்கிறார்
காதலி இதயத்தில் சுமக்கிறாள்
நான் உன்னை எங்கும் சுமக்கவில்லை
ஏன் என்றால் நட்பு
சுமையல்ல அது சுகமானது

Tuesday, September 23, 2008

மனிதன்

காற்றாக நான் இருந்தால்
சுவாசித்தாவது இருப்பாய்
பூவாக இருந்தால்
சூடியாவது இருப்பாய்
உயிருள்ள மனிதனாய் இருக்கிறேனே
என்ன செய்யப் போகிறாய்

Monday, September 22, 2008

இல்லை இல்லை

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலைகள் இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
உண்மையான நட்பில் பிரிவு இல்லை

என்னவென்று கூற

காற்று வந்ததும் கொடி அசைந்ததா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
என்று எனக்கு தெரியும் – ஆனால்
ஒன்று மட்டும் எனக்கு தெரிய வில்லை
உன் நட்பு வந்ததும்
வாழ்வில் இனிமை வந்ததா இல்லை
என் இனிமையான வாழ்கை இனுள்
உன் நட்பு வந்ததா
உன் நட்பு இல்லாத வாழ்வை
சாவு என்பதா
இது நாள் வரை நீ என் கண்ணிற்குப்
புலப்படா ததால் சாபம் என்பதா

Thursday, September 18, 2008

தெரியுமா

உன்னால் படிக்க முடியாமல் போன
என் கவிதைகள்
தற்கொலை செய்யப் போகின்றன
இப்போதெல்லாம் என்னிழல் கூட
என்னை விட்டுவிட்டு
உன்னை வந்து அடையவே
விரும்புகின்றன

நினைவு

எங்கேயடி ஒளிந்திருந்த்தாய் இதுநாள் வரை
முழுதுமாய் நிறைந்து விட்டாய் என் ஆணி வேர் வரை
மறக்க மாட்டேன் என்றும் உன்நினைவு தனை

உனக்கும் என் கதி எனில் நீயும் என்னை நினை

Friday, September 12, 2008

கேள்வி

என்னைக்கூட விட்டுவிடு பரவா இல்லை
உன்னை காணத் துடிக்கும்

என் கண்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?

ஆழம்

கடலின் ஆழத்தை அறிய
என் மூச்சை பணயம் வைத்தேன்
உன் காதலின் ஆழத்தை அறிய
என் இதயத்தை உனக்குப் பரிசளித்தேன்

மழை

குடையாக மாறட்டுமா
நீ நனையாமல் இருக்க
என் உள்ளங்கை தரட்டுமா
மெதுவாக உன் தலை கோத
இங்கிருந்தே வானம் பார்க்கிறேன்
மழைக்கு நன்றிகூற

Tuesday, September 9, 2008

சுழற்சி

உனக்கு மட்டும் எப்படியடி
புன்னகையே முகமாய் மாறியது
உன் விழி ஈர்ப்பு விசையினில் தான்

என்வாழ்கயே சுழல்கிறது

அருகில்

உன்னைப்பற்றி ஒரு கவிதை
எழுத நினைத்தால்
வார்த்தைகள் துள்ளிக் குதித்து
ஓடி வருகின்றன
அருகருகில் இருப்பதைத் தான்
நம் பெயர்கள் கூட

விரும்புகின்றன

ஊன்று கோல்

என் பத்து மாத சிறைவாசம்
தாயால் முடிந்தது
என் நீண்ட பிரம்மச்சரியம்
காதலியால் உடைந்தது
இன்னும் போகவேண்டிய என் வாழ்க்கை பயணத்திற்கு
உன்னட்பே ஊன்றுகோலாய் ஆனது

Monday, September 8, 2008

கனவில் சந்திப்போம்

மழையாக மாறி உன்னை
தொடத் துடித்தேன் – கொடை பிடிக்கிறாய்
கவிதைக்குள் அகப்படாமல்
நழுவி மறைகிறாய்
கனவுக்குள் சந்திப்போம்

தூங்கிப்போ - என்ன சொல்கிறாய் !!!!!!!!!!!!

கடவுள்

நீ தூங்கிப் போனாலோ
நான் தூக்கத்தை இழக்கிறேன்
உன்னுடன் பேசும் போதெல்லாம்
புத்துணர்ச்சி அடைகிறேன்
என் கண்ணிற்கு அகப்படாததால்

உன்னை கடவுளாய் உணர்கிறேன்

தூங்கிப் போ

வலிக்குமொவென உன் பெயரைக் கூட
மெதுவாக உச்சரிக்கிறேன்
உன் நிழலைக்கூட மற்றவர் தொடுகையில்
துடித்துப் போகிறேன்
நேரமாகி விட்டது
தூங்கிப் போ
கனவில் பார்கிறேன்

முடிவில்

படிக்க வைக்கிறாய்
பல நேரம் எழுத வைக்கிறாய்
சிரிக்க வைக்கிறாய்

சிலநேரம் சிலிர்க்க வைக்கிறாய்
முடிவில் என்னை முழுதுமாய் ஆக்ரமிக்கிறாய்

தபால் காரன்

ஒரேநாளில் என்னை விலை மதிப்பற்ற
பொக்கிஷங்களுக்கு சொந்தக்காரன் ஆக்கிவிட்டு
மறைந்து போய்விட்ட அந்த தெய்வீக தபால்காரனின்
காலில்விழ
எங்கே போய் தேடுவேன் அவனை

உன்னை பற்றி

நான் எழுதிய எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியவை தான் என்றாலும்

ஒன்று கூட உன்னை மாதிரி இல்லையே

பயணம்

எனக்கான சில நொடிகள் நீ வைத்திருப்பதால்
இன்னும் சுவாசிக்கிறேன்
இசை வழியாகவும்
கவிதை வரிகளாகவும்
என்னுள் நீ நிறைந்திருப்பதால் பயணிக்கிறேன்

Friday, September 5, 2008

சந்திப்பு

இரவுகள் விண்ணை முத்தமிடும் நேரத்தில்
நக்ஷத்திரங்கள் கண்சிமிட்டும் இனிய வேளையில்
தூக்கம் உன் கண்களை தழுவு வதற்கு முன்
நான் சொல்ல நினைப்பது …..கனவுக்குள் சந்திப்போம்

அழகு

நிலவின் அழகு தேயும் வரை
பறவையின் அழகு பறக்கும் வரை
காதலின் அழகு கண்ணீர் வரை
உறவின் அழகு சாகும் வரை
நட்பின் அழகு எனக்கு நீ இருக்கும் வரை

Tuesday, September 2, 2008

வியப்பு

உன்னோடு பேசாத தருணங்களை அது
இரவானாலும் வெறுக்கின்றேன்
நீ இல்லாத ஒரு வாழ்கையை நான்
கனவில் கூட தவிர்கின்றேன்
நமக்கிடையே ஆன வயதின் வித்யாசங்களை
சுறிங்கிப் போக யாசிக்கின்றேன்
விதி உட்கார்திருக்கும் அந்த இடைவெளி
உறைந்து போகாதா – அழுகின்றேன்
என்ன உறவு நமக்கிடையே புரியாமல் விழிக்கின்றேன்

உருவம்

நிலவாக மாறி குளிரவைக்கிறாய்
இசையாகி உருகவைக்கிறாய்
என் அணுக்களில் எல்லாம் கரைந்து இருக்கிறாய்
தென்றலாய் வீசி தொட்டுச் செல்கிறாய்
உயிர்கொண்டு என்முன்னே எப்போது தோன்றப் போகிறாய்
?

எழுதல்

உன் பார்வையின் தீவிரம் ஊடுருவிப் பாய
குற்றுயிரும் கொலை உயிருமாய் வீழ்ந்து கிடக்கிறேன்
உயிருடன் வந்து நீ என் முன்னே நிற்கையில் தான்

புத்துணர்ச்சி பெற்று மீண்டும் உயிர் தெழப் போகிறேன் .

தூக்கம்

சூரியனும் தூங்கிப் போய் ரொம்ப நேரமாச்சு
நிலவின் மாநாட்டுக்கு விண்மீன்கள் வந்தாச்சு
பறவைகள் எல்லாம் கூட்டிற்குள் போய் சேர்ந்தாச்சு
அலைகள் எல்லாம் மெதுவாக வீசத் தொடங்க்கிஆச்சு
எல்லா இடத்திலும் இருள் இங்கே படர்ந்தாச்சு
நீ மட்டும் உறங்க வில்லயே , என்ன ஆச்சு ?

சீக்கிரமாக தூங்கிப் போ என் கண்ணே : ரொம்ப நாழி ஆச்சு