Tuesday, September 29, 2009

தெரிந்து கொள்

உனக்கு உன்னை பற்றி நினைக்க
நேரம் இல்லா விட்டாலும்
உனக்கும் சேர்த்து
நான் உன்னை நினைக்கிறேன்

நினைப்பு

உன்னை நினைத்துக் கொண்டு
நான் இருப்பதாக நினைக்காதே
உன்னை நினைப்பதால் தான்
நான் இருக்கிறேன்

எப்படி

கண்கள் மூடியதும் கனவில் வந்து விடுகிறாயே
என் கண் இமைகளின் ஓரத்தில் குடி இருப்பாயா

நேசிப்பு

தென்றலை நேசிப்பேன் புயல் வரும் வரை
பூவை நேசிப்பேன் அது வாடும் வரை
உன்னை நேசிப்பேன் என் உயிர் உள்ள வரை

தெரியுமா

உன்னை நான் கடைசியாய் பார்த்து
பல நாட்கள் ஆகி இருக்கலாம் - ஆனால்
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நிமிஷம் தான் ஆகிறது