Tuesday, February 2, 2010

இமை

இமைகள் எனக்கு தேவை இல்லை
இமைப்பதால் ஒரு நொடி
உன்னை பார்ப்பது
தடைபடும் என்பதால்

புகழ்ச்சி

பரந்து விரிந்திருந்த உன் கவிதைப் புல்வெளிகளில்
ஆசை தீரப் படுத்திருந்தேன்
உன் எண்ண ஓட்டங்களின் வெள்ளப் பெருக்கில்
முழுதுமாய் நனைந்திருந்தேன்
உன் வார்த்தை விளையாட்டின் ஜாலங்கள் கண்டு
எனை மறந்து வியந்திருந்தேன்
அத்தனையும் படித்த உடன் புகழ்ந்து பேச
தமிழில் சொற்களை தேடி அலைந்து
மூர்ச்சை அடைந்தேன்

தீண்ட

அலை தீண்ட கரை நுரைத்தது
மழை தீண்ட நிலம் குளிர்ந்தது
வண்டு தீண்ட மலர் சிவந்தது
நிலவு தீண்ட விண்மீன்கள் துடித்தது
உன் விழி தீண்ட கவிதை உதித்தது

தவிப்பு

தூக்கம் இன்றி தவிக்கிறேன்
எனை தூங்க வைக்க அழைக்கிறேன்
தாலாட்டு கூட வேண்டாம்
தாயாக தலையில் தட்டிக் கொடுத்தாலே போதும்

தொலைபேசி

ஒவ்வொரு முறையும்
என் தொலை பேசியில்
யாராவது என்னை அழைக்கும் போது
அதில் ஒரு முறையாவது
உன் பெயர் வராதா என்று
ஏங்கியது என் மனது