Wednesday, October 28, 2009

தனிமை

நாம் விரும்பும் உயிர்
நம் அன்பை
புரிந்து கொள்ளாத போது தான்
உலகமே
நம்மை தனிமையில்
விட்டு செல்வது போல்
இருக்கும்

அன்பு

வேர்கள் மண்ணுக்குள்
இருக்கும் வரை தான்
பூக்கள் பூக்கும்
நினைவுகள் இதயத்தில்
இருக்கும் வரை தான்
அன்பு நீடிக்கும்

இதயம்

என் சின்ன இதயத்தில்
உங்களை போன்ற
அன்பான இதயங்களையும்
சுமக்கிறேன்
சுமையாக அல்ல
சுகமாக

Tuesday, October 27, 2009

சுமை

என் நினைவுகள்
எல்லாம் உன்னை பற்றியே
இருப்பதால் என்றுமே
உனக்கு அது
சுமையல்ல சுகமானதே

Saturday, October 24, 2009

Life

One day on a late evening
I was just reading through the msgs
that traversed between us
on various occasions.
On a time machine
I traveled back to those periods.
What a lovely feel it is to
relive on those times.
Your memories gushed onto my mind
and made me breathless.
All your memories are stocked
like books in my library of mind.
I pick up books randomly and
read cover to cover then
place it in the respective racks.
Your memories give me enough energy
to sail through my walk of life.
These msgs throw light onto myself
and enlighten me daily
to have a wonderful life till eternity.

பிடிக்கும்

கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது உன் கவலை தீர்க்கும் வரை
உறவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை
உன்னை எனக்கு பிடிக்கும்
என் உயிர் பிரியும் வரை

தொலைதல்

நேற்று என் கண்களுக்குள் உட்கார்ந்து கொண்டு
கனவுகளில் வலம் வந்தாய்
இன்று உன் அழகை கவிதைக்குள்
கொண்டு வர முடியாமல்
சொற்களுக்குள் தொலைய வைக்கிறாய்

அழகு

என் கவிதைகள் அழகாய் இருப்பது
அவை யாவும் உன்னை பற்றி
எழுதப்பட்டன என்பதால்

Wednesday, October 21, 2009

Trust

Its not about who think of you
and who don’t…
Its not about what someone thinks about you
and some don’t…
Its all about your feelings for oneself
and your loved ones –
Feelings held by love and concern
you treasure for them…
If too can be quantified –
u weigh equal to my dad…
The sharing of thoughts
which I could have with him
and would anticipate the right
and deserving feed back is
what I expect from you –
don’t know why –
but I’m able to trust you
more than myself….

Glance

What have you done to me?
I keep forgetting myself
when I start thinking about you.
What has happened to me?
The whole world is
upside down in my life.
Enough of hiding
yourself from my sight.
How is it you manage my cells
even being several kilometers away.
But one thing is sure,
your one glance on me
through your eyes
will gracefully rejuvenate my senses.

கண்ணீர்த்துளி

அதிக நெருக்கம் பிரிவை தரும்
அதிக அன்பு வருத்தம் தரும்
நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீர் துளிகளுக்கு வேலை ஏது?

ஜன்னல்

கொஞ்சம் ஜன்னல் திறந்து
வெளியில் பார்
அந்த அழகிய நிலவிடம்
சொல்லி அனுப்பி இருக்கிறேன்
என் சார்பில்
உன்னிடம் குசலம் விசாரிக்க

மனக்குளம்

என் மனக் குளத்தில் கல் எரிந்து விட்டு
ஒன்றும் தெரியாதது போல் இருக்கிறாய்
சிறு சிறு வளையங்களாய் உன் நினைவுகள்
என் மனம் எங்கும் வியாபித்து இருக்கின்றன

Tuesday, October 20, 2009

Dreams

Do you know one thing;
More than you think
about yourself,
I think more about yourself.
How come you immediately
appear in my dreams
as soon as I close my eyes,
are you living in my eyelids?
Leave alone me its ok,
but tell me what answer
you are going to tell to my eyes
which are longing to see you?

Wishing

Wishing someone also becomes
a formality sometimes.
But the same thing
if it is going to be for some one
very special in your life
it becomes the utmost responsibility.
I did that only.
The amount of happiness you realize
after wishing cannot be quantified.
And that too thro’ a poem
wishing a loved one is something
out of the world accomplishment.
I enjoyed.
My poem attained fulfillment
after reaching its destination.
Thanks for acknowledging my dear.

அடைப்பு

என் இரு கண்களுக்குள்
அகப்படாத உன் அழகை
எப்படி நான் வெறும்
இந்த சொற்களுக்குள்
அடைக்கப் போகிறேன்?

ஆழம்

எனக்கே தெரியாமல்
என்னுள் மிக ஆழத்துக்குள்
சென்று விட்டாய்
உன்னை தேடித் தேடியே
நான் என்னுள்
தொலைந்து விட்டேன்

எதிரொலி

யாரும் இல்லா வனாந்தரத்தில்
உன் பெயர் சொல்லி கூப்பிட்டேன்
அதன் எதிரொலியை மீண்டும் மீண்டும்
கேட்கவே மிகவும் ஆசைப்பட்டேன்
முடிவில் என் பெயரையே நான் மறக்க
நிலை தடுமாறி நின்று விட்டேன்

Wednesday, October 14, 2009

பிடித்தல்

எனக்கு எல்லாமே தெரிந்து விட்டது
உன்னை பற்றி
உனக்கு என்னை பிடித்து இருக்கிறதா
என்பதை தவிர

குழந்தை

பள்ளிக்குச் செல்ல மறுக்கும்
சிறு குழந்தையப் போல
அடம் பிடிக்கிறது என் மனது
உன் இதயத்தில் ஒரு ஓரத்திலாவது
எனக்கு ஒரு இடம் தர மாட்டாயா
என்று ஏங்கித் தவிக்கிறது

பாக்யசாலி

உன் நிழலிடம் சொல்லி வை
அதை விட நான் பாக்ய சாலி என்று
நிழலைப் போல் பகலில் மட்டும் இல்லாமல்
இரவிலும் என் நினைவுகள்
உன்னையே சுற்றி வருவதால்

Tuesday, October 13, 2009

Realisation

What to write as reply to your msgs I don’t know.
Whether will be able to reply that too don’t know.
But I know for sure the gravity of your love for me
and the place you have given it to me in your life.
I would not have asked anything more in my lifetime.
It puts me to be more responsible than what I am now.
I thoroughly introspect to understand my position
and reassure myself the superb bonding between us
which is unique in every sense.
You take it from me it’s a promise
we are bonded forever as long as
there is wind;
there is sun;
there is sea.
You are mine

Special

Wishes are always special when you receive them
but become cherishable when somebody special sends them….
U’ve been special for me I truly don’t know why …..
If I have to wonder the reason,
I’ll never be able to figure it by….
Days may pass, months may pass and so will the years but
what will keep our relationship special and living is
the feeling of togetherness –
which will remain however far we are –
now and forever…
Thanks for being there …

சுமத்தல்

கடற்கரை மணல் வெளியில்
பேசிக்கொண்டே நடந்து செல்கிறோம்
சிறிது தூரம் சென்ற பிறகு
திரும்பிப் பார்கிறேன்
என் பாதச் சுவடுகளை காணவில்லை
என்னை நீ சுமந்து கொண்டிருப்பது
உன் நெஞ்சில் அல்லவா

கவிதை

நெடு நேரம் யோசித்து
சொற்களை தேடி அலைந்து
ஒரு கவிதையில் உன் அழகை வர்ணிக்க
நான் முயற்சி செய்ய
உன் பெயரை விட
மேலான கவிதை ஒன்றை
நான் எப்படி எழுதிச் செல்ல

Monday, October 12, 2009

புலன்கள்

உன் பெயர் சொலி கூப்பிட்டே
என் உமிழ் நீரும் தித்திக்கின்றன
உன் நிழலை ஆவது தொட்டுக் கொண்டிருக்கவே
என் புலன்கள் எல்லாம் துடிக்கின்றன

ஈடு

மௌனங்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசும்
ஆனால் ஆயிரம் வார்த்தைகள் சேர்ந்தால் கூட
ஒரு நொடி மௌனத்திற்கு
ஈடாக முடியாது

பார்வை

மௌனங்களால் நாம் பேசிக் கொள்ளும் போது
வார்த்தைகள் மூர்ச்சை அடைகின்றன
உன் ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்
நான் உயிர்த்து எழுகிறேன்

சந்தோஷங்கள்

தொட்டுச் செல்லும் இனிய தென்றல் -
கை காட்டிச் சிரிக்கும் குட்டிக் குழந்தை -
மணம் வீசிப் பரப்பும் வண்ண மலர்கள் -
பச்சைப் பசேல் என்ற பரந்த புல்வெளி -
இவை கொடுக்கும் அனைத்துச் சந்தோஷங்களையும்
உன்னைப் பார்க்கையில் உணர்கிறேன்

உன்னை மாதிரி

நான் எழுதிய எல்லாக் கவிதைகளுமே
உன்னை பற்றியவை தான் என்றாலும்
ஒன்று கூட உன்னை மாதிரி
அழகாய் இல்லையே

பெயர்

எனக்கே தெரியாது
என் பெயர் இவ்வளவு அழகானது என்று
நீ என் பெயர் சொல்லி
கூப்பிடும் வரை

YOU

It might have been days and months
since I have seen You.
But do you know that it is only seconds
since I have thought about you.
Except your memories,
I am not in possession of any of your things,
which can remind U.
I have written some good number of poems
to describe about your graceful looks, charm etc
but none of the poems
is as beautiful as YOU.

Memories

Standing on the sea shore enjoying the cool breeze…
Looking at the distant moon which is coming up slowly…
Waves come upto me and touched my feet steadily…
Suddenly the memories of you splashed inside me…
The sequence of events happened between us…
Some wonderful moments which we cherished…
Innumerable acquaintances…
Wow! If I start writing it will go endlessly…
One fine late evening in November a graceful looking girl
entered the office with her father…
Occupied fully my mind…
A sweet beginning…
For an endless treasure…
Still her graceful gestures continue…
Like infinite waves, your memories are ever lasting…
Will come along till the end of my life…

Saturday, October 10, 2009

Questions

Our life is full of questions, one after another;
many unanswered and sometimes cannot be answered too.
Thinking of our relationship:
When it has started?
How it has started?
How is it going?
Where it is heading?
What have I done to you?
What have you done to me?
What are we up to?
What do I mean to you?
Are we friends?
Or much more than a friendship?
Questions generating some more questions.
Do we need an answer for all these?
Neither of us can comprehend.
Forget everything.
We are unique.

Wednesday, October 7, 2009

புடவை

நீ புடவை கட்டி இருக்கும் அழகைப் பார்த்து
இந்த கண்ணாடியும் வெட்கப் படுகிறது
உன் மேல் படர்ந்து இருப்பதால் தான்
அந்த புடவையும் பூரிப்பு அடைகிறது

சேமிப்பு

ஒவ்வொரு காசாக சேமிக்கும் சிறு பையன் போல
உன் நினைவுகளை என் மனதின் ஆழத்தில்
குவித்து வைத்திருக்கிறேன்
செலவு செய்ய மறுக்கும் கருமியை போல
அந்த நினைவுகளை அடிக்கடி நினைத்துப் பார்த்து
பத்திரப் படுத்திக் கொள்ளப் போகிறேன்

என்னை பார்

எத்தனையோ பெண்களை கடந்து சென்று இருக்கிறேன்
உன்னை பார்கையில் தான் நிலை தடுமாறி நிற்கிறேன்
உன் இரு கண்களால் என்னை கொஞ்சம் பார்க்க மாட்டாயா
மீண்டும் உயிர் பெற்று உன்முன்னே விழுத்து எழுகிறேன்

முழிப்பு

என்ன செய்து விட்டாயடி பெண்ணே என்னை
கால நேரங்கள் எதுவும் அறியாமல் முழிக்கிறேன் நான்
என்ன நேர்ந்து விட்டது எனக்குள்ளே இன்று
எனக்குத் தெரியும் உன் ஓரக் கண் பார்வையிலே
என் உலகமே அடங்கும் என்று

Saturday, October 3, 2009

நினைவலைகள்

அன்றொரு நாள் கடற்கரையில்
அலை ஓரம் நின்றிருந்தேன்
மெல்லிய தென்றல் காற்று என் முகம் தடவி
குசலம் விசாரித்துச் சென்றது
இடைவிடாமல் கடல் அலைகள்
என் பாடம் நனைத்து விட்டுப் போயின
சட்டென்று உன்னை பற்றிய நினைவுகள்
என் மனமெங்கும் வியாபித்தன
தொடர்ந்து எனைத் தீண்டும் கடல் அலை போல
இடைவிடாமல் உன் நினைவுகள்
என் மனதில் தோன்றின
என் உடலும் உள்ளமும் குளிர்ந்து
நான் அசைவற்று நின்றிருந்தேன்

அளவு

நான் உன் மீது வைத்திருக்கும்
அன்பின் அளவு தெரிய வேண்டுமா?
கொட்டும் மழைத் துளிகளை
எண்ணிப் பார்

தெரியுமா

உன்னை நீ நினைத்துப் பார்க்கின்ற நேரங்களை விட
நான் உன்னை நினைத்துப் பார்க்கின்ற நேரங்கள்
மிக அதிகம் என்று உனக்குத் தெரியுமா

பெருமை

உன்னை வெட்கப் பட வைப்பதில்
மிகவம் பெருமைப் படுகிறேன்
அந்த சில நிமிடங்களுக்காக
மீண்டும் ஒரு முறை கவிதை சொல்கிறேன்

Thursday, October 1, 2009

நியாபகம்

உன் நியாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை
உன் நியாபகங்களை தவிர

மாலை நேரம்

மேற்கு வானம் குங்குமக் குழம்பாகிவிட.....
இனிய தென்றல் மெல்ல வீசத் தொடங்க......
சிறு சிறு தூறல்கள் என் கன்னத்தில் மெதுவாக விழ......
அழகிய உன் முகம் என் மனதோடு இழைய......
மெய் மறந்து நிற்கின்றேன் என் புலன்கள் அனைத்தும் உறைய.

தாஜ்மஹால்

அவனும் இல்லை!
அவளும் இல்லை!
நிற்கிறது
காதல் காவியமாக
தாஜ்மஹால்!