Saturday, October 3, 2009

நினைவலைகள்

அன்றொரு நாள் கடற்கரையில்
அலை ஓரம் நின்றிருந்தேன்
மெல்லிய தென்றல் காற்று என் முகம் தடவி
குசலம் விசாரித்துச் சென்றது
இடைவிடாமல் கடல் அலைகள்
என் பாடம் நனைத்து விட்டுப் போயின
சட்டென்று உன்னை பற்றிய நினைவுகள்
என் மனமெங்கும் வியாபித்தன
தொடர்ந்து எனைத் தீண்டும் கடல் அலை போல
இடைவிடாமல் உன் நினைவுகள்
என் மனதில் தோன்றின
என் உடலும் உள்ளமும் குளிர்ந்து
நான் அசைவற்று நின்றிருந்தேன்

No comments: