நிறங்களின் இனச் சேர்கை இயற்கை
ஓவியனின் கை வண்ணத்தில்
வண்ணங்களாய் மாறி இருக்கிறது
எண்ணங்களின் மனச் சேர்கை
நம் இருவரின் ஒத்த அலைவரிசையில்
நட்பாய் மலர்ந்து ஜொலிக்கிறது
பார் அந்த மேகத்தை
ஒரு தோழி போல் மலை மீது
முழுதுமாய் வியாபித்து இருக்கிறது
மௌனமாய் தவழ்ந்து ஓடும்
அந்த நதியில் உன் முகம்
தெரிவதாய் எனக்கு படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment