உன் நியாயமான கோரிக்கையை கடவுள் கேட்டு
உடனே உன்னை போய் பார்க்கச் சொன்னார்
தனியாக நிற்கின்ற அந்த பெண்ணிடம்
அவள் தனிஆனவள் இல்லை என்று கூறச் சொன்னார்
இரு கரம் நீட்டி அவள் அழைக்கின்றாள்
புரிந்து கொண்டு புன்முறுவலுடன் அவளிடம் போய் சேரு என்றார்
மலர் தூவி நிற்கின்ற விதம் பார்த்து
மறுக்காமல் நட்பு பாராட்ட அனுப்பி வைத்தார்
கூடிப் பேச ஆள் தேடும் அந்த குழந்தையிடம்
கோவிக்காமல் நடந்து கொள்ள சொல்லித் தந்தார்
இயற்கையை ரசித்து வியந்திருக்கும் அந்த கன்னியை
முழுதாய் புரிந்து கொண்டு கூட இருக்கச் சொன்னார்
யாருமே இல்லாத தூரத்தில் இருக்கின்றாள் அவள்
யாதுமாக இருந்து சந்தோஷப் படுத்தச் சொன்னார்
தண்ணீரில் பிரதி பலிக்கும் அவள் பிம்பமும் ஜொலிக்கிறது
அவள் மகிழ்ச்சிக் கடலில் நீந்த உன் அன்பை படகாக்கு என்றார்
தனித்திருக்கும் அவளின் ஒவ்வொரு மணித் துளியையும் உயிரூட்டி
அவளது நண்பன் என்ற பெருமையுடன் வாழ்ந்து விடு என்றார்
அவரது கட்டளை படி உன்வாசல் வந்து அடைந்துள்ளேன் ஆவலோடு
நண்பனாக ஏற்றுக் கொண்டு என் வாழ்வுக்கு அர்த்தம் கொடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment