Monday, August 18, 2008

ஏக்கம்

ஆசை முகம் மறந்து போச்சு
என் நிலைமை ஏன் இப்படி ஆச்சு
என் ரத்தத்தில் எல்லாம் உன் மூச்சு
சுத்தமாக கலந்து ரொம்ப நாளாச்சு

என்னை நீ நினைக்காத ஒவ்வொரு நிமிடங்களும்
என் ஆயுட் காலத்தில் அப்படியே குறைக்கப்படும்
நீ என்னோடு பேசாத எந்த ஒரு நாளும்
என் நாள் காட்டியில் இருந்து கிழிந்து போகையில் வருத்தப் படும்

உன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் நீ பெருமை படுத்துகிறாய்

என்னை மட்டும் தள்ளி வைத்து ஏன் கொடுமை படுத்துகிறாய்
அந்நியனிடம் கூட நீ சட்டென்று பேசி விடுகிறாய்
எனக்கான அந்த ஒரு சொல்லை எப்போது நீ கூறப் போகிறாய்

உன்னை காதலித்த பொது என் வயதை கண்டு கொண்டேன்
கை பிடித்து நடக்கையில் வேறு உலகம் சென்று வந்தேன்
இப்போது நீ இல்லா வெறுமையில் எனக்கே கூட எதிரி யானேன்
உன் ஊரக் கண்ணால் ஒரு பார்வை பார் - சிறிது மூச்சு விடுவேன்

அழகாக நீ பிறந்து விட்டது உன் தப்பு இல்லை
என் கண்ணில் தோன்றி மறைந்து விட்டாயே அதுதான் தொல்லை
இப்போதெல்லாம் பெண்களோடு நீ பேசினால் கூட எனக்கு பிடிப்பதில்லை
என்ன நேர்ந்து விட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

No comments: