Monday, August 18, 2008

அனுமதி

சிரிக்கும் பூக்களை பார்க்கும் பொழுதினில்
உன் பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்கிறேன்

சல சலக்கும் ஓடையை கடக்கும் நேரத்தில்
உன் கால் கொலுசோ என திரும்ப நினைக்கிறேன்

இரவில் கடந்து செல்லும் அடர்ந்த மேகங்களில்
உன் முகத்தின் சாயல் தேடி அலைந்து இருக்கிறேன்

மெல்ல தொட்டுப் போகும் தென்றல் காற்றினில்
உன் சுவாசம் கலந்து இருப்பதை உணர்ந்து இருக்கிறேன்

நீ என் பெயர் சொல்லி அழைக்கும் போதினில்

என் பெயரும் அழகோ என வியந்து இருக்கிறேன்

சின்னஞ் சிறு தூறல் விழும் சில மாலை நேரங்களில்

நீ என் அருகில் இல்லா வெறுமை கண்டு நொந்து இருக்கிறேன்

உன் ஓரக் கண்ணால் பார்த்து நீ அனுமதிப்பாய் எனில்

உன் நிழலாய் இருக்க நான் சம்மதிக்கிறேன்

No comments: