Friday, August 15, 2008

சம்மதம்

என் நினைவுகள் எல்லாம் உன்னைச் சுற்றியே வலம் வர
நான் பார்ப்பவர் அனைவரும் உன் முகச் சாயலாய் தோன்ற
கனவில் கூட நாம் இருவரும் சிலமணி நேரமே பிரிய
என் பெயரை நான் எங்ஙனம் தேடிக் கண்டு பிடித்துக் கூற

ஊர் பெயர் விலாசம் தெரியா வனாந்தரத்தில் சஞ்சலிக்கிறேன்
எப்படி எப்படியோ இருந்த நான் உன் முன்னே கைதியாய் மௌனிக்கிறேன்
என் நிலைமை குறித்து நீ ஒருத்தியாவது விசாரிப்பதால் கடமைபடுகிறேன்
எப்படியாவது சொல்லி அனுப்பு உன் சம்மதத்தை - கொஞ்சம் மூச்சுவிடுகிறேன்

No comments: