Monday, August 18, 2008

உன் வருகை

திரும்பிப் பார்கையில் தொலைந்து போகிறேன்
பிரிந்து போகையில் கலைந்து போகிறேன்

உன்னை நினைக்கையில் கவிந்ஜநாகிறேன்
என்மூச்சுக் காற்றில் கூட உன்வாசம் உணர்கிறேன்

தூக்கத்திற்கு எதிரி ஆகிறேன்
முழித்துக் கொண்டே கனவு கண்கிறேன்

உன் பாதம் தொட்ட மண்ணை பூசிக் கொள்கிறேன்
உன் சுவாசம் வீசும் போதெல்லாம் மோட்சம் அடைகிறேன்

உன் நிழல் எப்போதும் என்மேல் படரவே விரும்புகிறேன்
உன் மிதி அடியாய் கூட நான் மாறுவதற்கு முயலுகிறேன்

உன் பார்வை படும் இடத்திலேயே இருக்க முயல்கிறேன்
நீ பாராமல் திரும்பும் போதெல்லாம் முத்துக் குளிக்கிறேன்

என்னென்னவோ உன்னை பற்றி எழுத நினைக்கிறேன்
சொற்களை தேடித்தேடி களைத்துப் போகிறேன்

உன் வருகையை நோக்கியே ஆவலாய் காத்து இருக்கிறேன்
இன்று நீ வாராமல் போயின் நாளை என்ற ஒன்றை நான் இழக்கப்போகிறேன்

No comments: