Tuesday, August 12, 2008

என் நிலைமை

என் திறமையை நீ சோதிக்கவில்லை - தோழி
உன்னையே நீ நம்ப மறுக்கிறாய்
என்னவென்று நான் தேடுவது உன்பார்வையில்
நான் பார்ப்பதுவே உன் விழிமூலம் என்று ஆகையில்

நீயே நான் என்று ஆன பின்பு

எனக்கென்று ஒன்று தனியாக ஏது
என் வேண்டுதல்யாவும் நீயே அறியும் போது
தேடுதல் வேட்கையில் பயந்தான் ஏது

என்னென்னவோ புரிய ஆரம்பித்து விட்டது எனக்கு
உன் இரு விழிகளில் புகுந்து நான் வெளிவரும் போது
முழுதும் தோற்றுப் போனதாய் தோன்றுகிறது எனக்கு
உன் மௌனத்தை மொழி பெயர்க்க உதட்டோரம் பயணித்த போது

No comments: