சந்தேகப்படு
நாளை ஒரு பகல் வராமல் கூடப் போகலாம்
கடல் முழுதும் வற்றிப்போய் நிலமாக மாறலாம்
வானத்து விண்மீன்கள் மொத்தமாய் உதிரலாம்
தன்னைத் தானே சுற்றுவதை பூமிகூட மறக்கலாம்
ஆனால்
சந்தேகப்படாதே
நம் இருவருக்கும் இடையே ஆன நட்பை
தொப்புள் கொடி போன்ற அதன் உணர்வை
உள்ளங்களில் உணரப்படும் அதன் அதிர்வை
தூரத்தால் விலகினாலும் எண்ணங்களால் நெருங்கும் நம் மனதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment